அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் 1995 முதல் 2005 வரை, பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்தோர் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக இருந்த சுதர்சனம் உட்பட, 13 பேரை அவர்கள் கொலை செய்தனர்.
இந்நிலையில் சுதர்சனம் கொலை வழக்கில் கைதான ஜெகதீஷ், ராகேஷ், அசோக், ஆகியோர் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தொடர்ந்து மூன்று பேருக்கான தண்டனை விவரம் வரும் 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
















