தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
ஊத்துமலை உச்சி மாகாளியம்மன் கோயிலில் விவசாயிகளின் கருத்து கேட்பு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.
அப்போது கிராம மக்கள் பட்டாசு வெடித்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நயினார் நாகேந்திரன் மக்களிடம் மனுக்களை பெற்று கொண்டு குறைகளை கேட்டறிந்தார். பின்னர் நலிவடைந்த நிலையில் உள்ள, இரண்டு குடும்பத்தினருக்கு பசுங்கன்றுகளையும் அவர் வழங்கினார்.
















