சென்னை அம்பத்தூர் அருகே இரவோடு இரவாக விநாயகர் கோயில் இடித்து அகற்றப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளிக்குப்பம் பகுதியில் விநாயகர் கோயில் ஒன்று இருந்த நிலையில், அதனை மர்ம நபர்கள் சிலர் இரவோடு இரவாக இடித்து அகற்றியுள்ளனர்.
கோயில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்ததோடு, மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், பாஜக மற்றும் இந்து அமைப்பினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
















