சென்னையில் சிட் பண்ட் நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி செய்த காங்கிரஸ் பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
போரூர் பகுதியை சேர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை பொதுச்செயலாளர் பாஸ்கர் என்பவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகச் சிட் பண்ட் நிறுவனம் நடத்தி பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, பாஸ்கர் மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றிய நிர்வாகிகள் தலைமறைவாகியுள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் பிரமுகர் பாஸ்கரை கைது செய்ய வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட மக்கள், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
















