நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஒன்றிய கவுன்சிலர் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காக்கநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர், கடந்த 19ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து, தன் கணவர் இறந்ததற்கு அம்பாசமுத்திரம் ஒன்றிய திமுக கவுன்சிலர் ஆகாஷ் உட்பட ஆறு பேர் காரணம் என முத்துக்குமாரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும், கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஆகாஷ் குடும்பத்திற்கும், தனது குடும்பத்திற்கும் குப்பைகளை கொட்டுவதில் பிரச்சனை இருந்து வந்ததாகவும், அப்போது திமுகவைச் சேர்ந்த சிலர் முத்துக்குமாரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முத்துக்குமாரின் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு சென்று கோரிக்கை விடுத்த விலையில், 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
















