ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட உக்ரைன் பகுதிகளை ஒருபோதும் இழக்க முடியாது என்பதால், அமெரிக்க ஆதரவு அமைதி திட்டத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிராகரித்தார்.
சமூக ஊடகங்கள் வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்பின் 28 அம்ச திட்டத்திற்கான மாற்றுவழிகளை முன்மொழிவதாகக் கூறினார்.
அமெரிக்க ஆதரவு அமைதி திட்டமானது, உக்ரைனையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் ஆச்சர்யப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டம், தங்களது நிலப்பகுதியை விட்டுக்கொடுக்க வற்புறுத்துவதோடு, ராணுவத்தையும் பாதியாகக் குறைத்து ரஷ்யாவிடம் உக்ரைனை சரணடைய கட்டாயப்படுத்துவதாகத் தெரிவித்தார். உக்ரைன் அமைதியை விரும்பவில்லை என்ற கூற்றையும் ஜெலன்ஸ்கி நிராகரித்தார்.
















