ராஜஸ்தானில் டெல்லி – மும்பை தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி வெடித்துச் சிதறிய அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன.
உத்தரபிரதேசத்தில் இருந்து மகாராஷ்டிரா நோக்கிக் கண்டெய்னர் லாரி ஒன்று, சென்று கொண்டிருந்தது.
ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் அருகேயுள்ள டெல்லி – மும்பை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, திடீரெனச் சாலையோரம் இருந்த கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் கண்டெய்னர் வெடித்துச் சிதறியதில் ஓட்டுநர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
















