மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் உட்பட 5 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கெய்சாம்பட் தௌடா பாபோக் லெய்காய் என்ற பகுதியில் தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த தீவிர போராளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதவிர மேலும் ஒருவர் ஆயுதங்களுடன் பிடிபட்டார். மணிப்பூரில் பல்வேறு இடங்களில் இந்தத் தீவிரவாதிகள், மிரட்டிப் பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
















