மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 246 நகராட்சி மன்றங்கள் மற்றும் 42 நகர பஞ்சாயத்துகளுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நகராட்சி மன்றங்கள் மற்றும் நகர் பஞ்சாயத்துகளில் பாஜக சார்பில் போட்டியிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கவுன்சிலர் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் ரவீந்திர சவான் தெரிவித்துள்ளார்.
மேலும் இது பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸின் தலைமையின் காரணமாக வாக்குப்பதிவுக்கு முன்பே கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார்.
















