தாம்பரம் தொகுதியில் 24 ஆயிரம் போலி வாக்குகள் இருப்பதாக அதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஆளுங்கட்சியின் அழுத்தம் காரணமாகச் சில ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையரும் எஸ்ஐஆர் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டியிருந்தார்.
அதேபோல், தாம்பரம் தொகுதிக்குட்பட்ட இரும்புலியூர் காயத்ரி நகர் மூன்றாவது தெருவில், கதவு எண் ஒன்றில் 360 வாக்குகள் இருப்பதாகவும், ரோஜா தோட்டம் இரண்டாவது தெருவில் கதவு எண் ஒன்றில் 150 வாக்குகளும் இருப்பதாகவும் இபிஎஸ் தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், தாம்பரம் தொகுதியில் 24 ஆயிரம் போலி வாக்குகள் இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
















