இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனாவும், பிரபல இசையமைப்பாளரும் இயக்குநருமான பலாஷ் முச்சலும் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர்.
உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்ற டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் ஸ்ம்ரிதி மந்தனாவுக்கு Propose செய்த வீடியோவை பலாஷ் முச்சல் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
ஸ்ம்ரிதியை கண்ணைக் கட்டிய நிலையில் மைதானத்தின் நடுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற பலாஷ் முச்சல், ஸ்ம்ரிதி கண்களைத் திறந்தபோது, கைகளில் மோதிரத்துடன் முழங்காலிட்டுத் திருமணம் செய்துகொள்ளக் கேட்டுக் கொண்டார்.
அப்போது உணர்ச்சிவசப்பட்ட ஸ்ம்ரிதி மந்தனா, புன்னகையுடன் ஆம் என்று தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.
இந்த முன்மொழிவுக்குப் பிறகு, பலாஷின் சகோதரியும் பாடகியுமான பலக் முச்சல் உட்பட இருவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மைதானத்தில் வந்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த இளம் காதல் ஜோடிக்கு வரும் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இவர்களது திருமணத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், இந்தக் கொண்டாட்டமான கிரிக்கெட் போட்டி மணமகன் அணிக்கும், மணமகள் அணிக்கும் இடையே நடைபெற உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இரு அணிகளும் வாழ்க்கை எனும் விளையாட்டில் வெற்றி பெறட்டும் என வாழ்த்தியுள்ளார்.
















