நீலகிரி மாவட்டம், உதகையில் பெண் காவல் ஆய்வாளருக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பிய மாவட்ட எஸ்.பி அலுவலக உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகரை சேர்ந்த முருகன் என்பவர் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.
இவர் நீலகிரியில் பணிபுரியும் பெண் காவல் ஆய்வாளர் ஒருவரின் தொலைபேசிக்கு ஆபாச குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோக்கள் அனுப்பியுள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தார். அதன் பேரில் முருகனை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
















