பெங்களூருவில் CMS வாகனக் கொள்ளை வழக்கில் காவலர் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் கடந்த 19ம் தேதி பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளானது. இதனைத் தொடர்ந்து பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார், கர்நாடகா மட்டுமின்றி, ஆந்திரா மற்றும் தமிழகத்திலும் சோதனையை விரிவுபடுத்தினர்.
இரண்டு துணை ஆணையர்கள், இரண்டு கூடுதல் ஆணையர்கள் கொண்ட 50க்கும் மேற்பட்ட காவல்துறை குழுவினர் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் முக்கிய குற்றவாளியான ஆந்திராவை சேர்ந்த ரவி, காவலர் அன்னப்பன், சேவியர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகளை கைது செய்தனர்.
CMS வாகனத்திலிருந்து மொத்தம் ஏழு கோடியே 11 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் ஆறு கோடியே எழுபது லட்சத்திற்கும் அதிகமான பணம் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
















