துபாய் தேஜஸ் போர் விமான விபத்தில் விங் கமாண்டர் நமன் சியால் உயிரிழந்த செய்தி வேதனையளிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நமன் சியால் பாரதத்தின் தேஜாஸின் முழுமையான திறன்களை உலகிற்கு வெளிப்படுத்த முயற்சிக்கும் ஒரு துணிச்சலான விமானி என தெரிவித்துள்ளார். வீரர்களுக்கு வெற்றி, தோல்வி வரலாம் என்றும் ஆனால் முயற்சி செய்யாமல் இருக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு துணிச்சலான விமானி, தனது வாழ்க்கையின் கடைசி மரண நொடிகளில் தனது சொந்த பாதுகாப்பைத் திட்டமிடும் உரிமையை முழுமையாகப் பெற்றிருக்கும் போது, கீழே உள்ள பொதுமக்களிடமிருந்து தனது விமானத்தை விலக்கி, ஒரு வெற்றுப் பகுதிக்குள் சென்று உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
விங் கமாண்டர் நமன்ஷ் சியாலை நாடு எப்போதும் உங்களை நினைவில் வைத்துக் கொள்ளும் என்றும், உங்கள் குடும்பத்தினருடன் நிற்கும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
















