டாஸ்மாக் விற்பனைக்கான திட்டங்களை வகுத்த திமுக அரசு, விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதற்கான திட்டங்களை வகுக்கவில்லை என பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தோல்விகளை மறைப்பதற்காக மத்திய அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை திமுமக கூறுவதாக தெரிவித்தார்.
திமுக விவசாயிகள் விரோத ஆட்சி என்றும் மீத்தேன், காவிரி பிரச்னைகளுக்கு காரணம் திமுக தான் என்றும் அவர் கூறினார்.
















