சபரிமலையில் நடை திறந்து 8 நாளில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேசவம் போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலையில் மண்டல தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் உடனடி முன்பதிவு எண்ணிக்கையை 20 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக குறைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக சபரிமலையில் கூட்ட நெரிசல் குறைந்துள்ளது. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து வரும் நிலையில், கடந்த இரு நாட்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. .
கடந்த 8 நாட்களில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியுள்ளது ,டிசம்பர் 20ஆம் தேதி வரை 25 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளதாகவும், உடனடி முன்பதிவை 10 ஆயிரமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தேசவம் போர்டு குறிப்பிட்டுள்ளது.
















