மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த போது கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், பாதுகாவலரின் செயலால் கோபமடைந்த வீடியோ வைரலாகி வருகிறது.
மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் பஞ்சாப் அணி வீரர் ஷஷாங்க் சிங்கின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்பதற்காகச் சக அணி வீரரான ஸ்ரேயாஸ் ஐயரும் வருகை தந்தார். அப்போது அவரை முன்னோக்கி செல்ல விடாமல் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.
தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயருக்கு பாதுகாவலராக வந்த நபரே அவரிடம் செல்ஃபி எடுக்க முயன்றார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் கோபமடைந்தார். இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
















