உத்தராகண்டில் அரசுப் பள்ளி அருகே 20 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அல்மோரா மாவட்டத்தின் தபாரா கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள புதர்களில் சந்தேகத்திற்கிடமான பொட்டலங்களை கவனித்த பள்ளி முதல்வர் உடனடியாகக் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
2 போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்த நிலையில் புதர்களில் சில ஜெலட்டின் குச்சி பாக்கெட்டுகள் காணப்பட்டன.
மற்றவை 20 அடி தொலைவில் காணப்பட்டன. மொத்தம் 161 ஜெலட்டின் குச்சிகள் பாதுகாப்பாகச் சீல் வைக்கப்பட்டு வெடிகுண்டு அகற்றும் படையினரால் சேமிக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
















