அயோத்தி ராமர் கோயில் கொடியேற்ற விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் நாளை கொடியேற்ற விழா நடைபெறவுள்ளது.
இதில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
















