நாடு சுதந்திரமடைந்த இந்த 80 ஆண்டுகளுக்குப் பிறகு, கோவை மாவட்டத்திலுள்ள மலைக் கிராமத்திற்கு முதல்முறையாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு மேல், அடர்ந்த வனப்பகுதிக்குள் கடம்பன் கோம்பை என்ற மலைக் கிராமம் உள்ளது.
இந்த மலைக் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் கடந்த பின்பும், இந்தக் கிராமத்திற்கு சாலை, மின்சாரம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் போய்ச் சேரவில்லை.
இங்கு வாழும் மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் கூட, டோலி கட்டி 8 கிலோ மீட்டருக்கு அவர்களை தூக்கி வரும் அவலநிலைதான் இதுவரை இருந்து வந்தது.
இத்தகைய சூழலில், கடம்பன் கோம்பை கிராமத்திற்கு தமிழக அரசு ஒரு கோடியே 30 லட்சம் செலவில் கான்கிரீட் சாலைகளும், மின் இணைப்பும் அமைத்துத் தந்துள்ளது.
இந்த மலை கிராமத்திற்கான மின்சார வசதியை திமுக எம்பி ஆ.ராசா தொடங்கி வைத்தார். மின்சார வசதி கிடைத்த மகிழ்ச்சியை, மலைக் கிராம மக்கள் பாரம்பரிய நடனமாடி கொண்டாடினர்.
















