விருதுநகர் அருகே டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டிப் பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொட்டியாங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் சின்னராஜ், விற்பனையாளர் சரவணன் ஆகிய இருவரும் கடந்த 20ம் தேதி கடையை பூட்டிவிட்டு பணத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது 3 பேர் ஆயுதங்களைக் காட்டி அவர்களிடம் இருந்த ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர்.
புகாரின் பேரில் முத்துமணி, வசந்தகுமார், சதீஸ்குமார் ஆகியோரை கைது செய்த போலீசார், ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மீட்டுள்ளனர்.
















