தூத்துக்குடியில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன.
கனமழை காரணமாகத் தூத்துக்குடியின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது, இதன் ஒரு பகுதியாக முத்தையாபுரம், ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த உப்பளங்களை மழை நீர் சூழ்ந்தது.
இதில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான உப்பளங்கள் சேதமான நிலையில், ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.
உப்பளங்கள் சேதமானதால் உப்பு உற்பத்தி செய்யும் பணி முற்றிலும் முடங்கியுள்ளதாக வேதனை தெரிவித்த உற்பத்தியாளர்கள், ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
















