தமிழக பாஜக செயலாளர் அஸ்வத்தாமன் கோரிக்கையை ஏற்று திருப்பதி – மன்னார்குடி பாமணி விரைவு ரயில் பண்ருட்டியில் இன்று முதல் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி – மன்னார்குடி பாமணி விரைவு ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்தது.
இது தொடர்பாகத் தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதனை பெற்றுக் கொண்ட ரயில்வே அமைச்சர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி திருப்பதி – மன்னார்குடி “பாமணி” விரைவு ரயில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி ரயில் நிலையத்தில் இன்று முதல் நின்று செல்லும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடிதம் அளித்த ஓரிரு நாளிலேயே அனுமதி கிடைத்ததை அடுத்து, அஸ்வத்தாமனுக்கும் மத்திய அரசுக்கும் பொதுமக்களும் பாஜகவினரும் நன்றி தெரிவித்தனர்.
















