சேலத்தில் உள்ள தலைவாசல் காய்கறி சந்தை மழையின் காரணமாகச் சேறும், சகதியுமாக மாறிய நிலையில் அதனை சீரமைத்து தரக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கனமழை காரணமாகத் தலைவாசல் பகுதியில் உள்ள தினசரி காய்கறி சந்தையின் நுழைவுப்பகுதி மற்றும் உள் வளாகம் என அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்கியிருந்தது.
இதனால் சேறும், சகதியுமாக மாறிய காய்கறி சந்தையில் தொழில் செய்வது கடினமாக இருப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.
சந்தையின் நிலை குறித்து தமிழ்ஜனம் தொலைக்காட்சியில் செய்திகள் வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழுவினர் சந்தையை சீரமைத்து தருமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
















