உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற சூர்யகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் தலைமை நீதிபதி கவாய் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, நாட்டின் 53-வது தலைமை நீதிபதியாகச் சூர்யகாந்த் பதவியேற்றார்.
டெல்லி தர்பார அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற சூர்யகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தலைமை நீதிபதியாகப் பதவியேற்றிருக்கும் சூர்யகாந்தின் எதிர்கால பயணம் சிறக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
















