நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் புலி தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தார்.
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள மாவனல்லா பகுதிகளில், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், மாவனல்லா கிராமத்தை சேர்ந்த பழங்குடியின சமூக மூதாட்டி நாகியம்மாளை புலி தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், நாகியம்மாளின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தானியங்கி கேமராக்கள் பொருத்தி புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
















