பாலிவுட் ஹீமென் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட தர்மேந்திராவின் இறப்பு அவரது ரசிகர்களையும் திரையுலகினரையும் கலங்க வச்சிருக்கு…ஒரு சினிமா சகாப்தமா திகழ்ந்த தர்மேந்திரா பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்….
மாறுபட்ட யாரும் எதிர்பாராத கதாபாத்திரத்துல அந்தக் காலத்துல நடிச்சவங்களுடைய ஸ்டைல்ல இப்ப உள்ள நடிகர்கள் ஃபாலோ பன்றது வழக்கம். அப்படி 4 ஜெனரேசன்னா பலருக்கு ரோல் மாடல்லா இருந்தவர்தான் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா.
தன்னுடைய 25 வயசுல தில் பி தேரா ஹம்ன்ற படம் மூலமா இந்திய சினிமாவுக்கு அறிமுகம் ஆன தர்மேந்திராவுக்கு பெரிதா இந்தப் படம் அங்கீகாரம் கொடுக்கல. அதுக்கு பின்ன shoa aur Shabnam, boy friend, anupadh, shaadi chand aur suraj மாதிரியான படங்கள் தர்மேந்திராவுக்கு நல்ல அங்கீகாரத்த கொடுத்துச்சு. 1961டூ 1967 வரைக்கும் காதல் படங்கள்ள நிறையா நடிச்சிட்டு இருந்த தர்மேந்திரா மாறுபட்ட கதாபத்திரங்களுல நடிக்க ரொம்பவே ஆர்வம் காட்ட ஆரம்பிச்சாரு.
இப்படி சூப்பர் ஹூரோவா உருவான தர்மேந்திராவ ரசிகர்கள் செல்லமா ஹீமேன்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. 1980 வர தர்மேந்திரா தொட்டதெல்லாம் ஹிட்டு. அமித் உடன் சேர்ந்து நடிச்ச படம் சோலே படம்….. 19 ஆண்டுகள் வரை இந்த படத்தோட வசூலை வேறு எந்த படமுமே முறியடிக்கல… தர்மேந்திரான்னு சொன்னா ஹேமாமாலினிய சொல்லாம இருக்க முடியாது. ஏன்னா ரியல் லைஃப்லையும் ரீல் லைஃப்லையும் பயங்கரமா பொருந்திப் போன ஜோடி.
கெமிஸ்ட்ரின்னா அது இந்த ஜோடி தான். 1970ல Tum Haseen Main Jawaan படத்துல காதல் மலர 1980ல திருமணம் செஞ்சிகிட்டாங்க. இவங்க ஜோடியா நடிச்ச பல படஙகள் ஹிட் 1990க்கு பின்ன குணச்சித்திர வேடங்களுல நடிச்ச தர்மேந்திராவுக்கு அப்பவும் மவுசு போகல. இல்ல இல்ல… இப்ப வரைக்கும் மவுசு போகல….
இதுமட்டுமா… அரசியல்லையும் தர்மேந்திரா தடம் பதிச்சாரு…. ராஜஸ்தானில உள்ள பிகானேர் தொகுதியில இருந்து பாஜக சார்பில இந்தியாவுடைய 14வது மக்களவை உறுப்பினரா தேர்ந்தெடுக்கபட்டாரு.
தர்மேந்திராவுடைய மகன்கள் சன்னி தியோல், கங்குவா, ஜனநாயகன் படத்துல நடிச்சிருக்க….. பாபி தியோல், மகள் ஈஷா தியோல் சினிமாவுல கோலோச்சிட்டு இருக்காங்க. இவர் இறுதியா நடிச்ச படம் இக்கிஸ். டிசம்பர் மாசம் திரைக்கு வருது. ஆனா அத பாக்கிறதுக்கு தர்மேந்திரா இல்ல. இவ்வளவு காலமா வயசானாலும் ரிட்டெயர்மெண்ட் இல்லாம ஓடிகிட்டு இருந்த தர்மேந்திரா இப்போ நிரந்தரமா ஓய்வு எடுக்கிறாரு.
















