அடுத்த கல்வியாண்டு முதல், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிய பாடத்திட்டங்களை உருவாக்க, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், சிறு வகுப்புகளுக்கு தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்கள், கதையை போல எளிமையாக கூறும் வகையில் இருக்க வேண்டும் என்று குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
அடுத்த கல்வியாண்டில், முதல் மூன்று வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படும் எனவும் அதற்கடுத்த ஆண்டில், 10ம் வகுப்பு வரையும் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
















