தோட்டக்கலைத்துறையில் சுமார் 75 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சாகுபடி பரப்பு விரிவாக்கம், இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு உள்ளிட்டட பணிகளுக்காக விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகளால் மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன.
இதற்காகத் தோட்டக்கலைத்துறைக்கு ஆண்டுதோறும் 136 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.இந்தநிலையில் நூதன முறையில் 75 கோடி ரூபாய் அளவிற்கு தோட்டக் கலை துறையில் முறைகேடு நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தோட்டக்கலைத்துறையின் ஆய்வுக் கூட்டம், அதிகாரிகளுக்குத் தேநீர், உணவு, போக்குவரத்து செலவுக்கு இந்தப் பணம் செலவிடப்பட்டுள்ளதாகக் கணக்கு காட்டப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டுமெனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
















