இந்தியா – கனடா இடையே மீண்டும் தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2030ம் ஆண்டிற்குள் இந்தியா – கனடா இடையேயான வர்த்தகத்தை 4 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை தருவதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
கடந்த 2023ம் ஆண்டு இந்தியா – கனடா உறவு பாதிக்கப்பட்டதன் காரணமாக, தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுகளை கனடா நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
















