சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 450 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
வருடாந்திர மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காகச் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு, நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால், பாதுகாப்பை மேம்படுத்தத் திருவிதாங்கூர் தேவசம் போர்டு உடன் கேரள காவல்துறை இணைந்து சபரிமலை பகுதியில் 450 சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளது.
சிசிடிவி கேமராக்களை கண்காணிக்க சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், திடீரெனப் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தால், அந்த இடத்திற்கு அதிகாரிகள் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோத செயல்களை தடுக்கவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
















