தாம்பரத்தில் எஸ்.ஐ.ஆர் படிவம் முறைகேடாகப் பதிவேற்றம் செய்யப்படுவது குறித்து கேள்வி எழுப்பிய அதிமுகவினருக்கு திமுக ஊராட்சிமன்ற தலைவர் கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.
தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம் தென் ஊராட்சியில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பணி நடைபெற்றது.
அப்போது திமுக ஊராட்சி மன்ற தலைவரான ஜெகதீஸ்வரன் முறைகேடாகப் படிவங்களை பதிவேற்ற முற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனை அதிமுக நிர்வாகியான மதுரபாக்கம் மனோகரன், முன்னாள் ஊராட்சிமன்ற உறுப்பினர் ஆதிகேசவன் உள்ளிட்டோர் தட்டி கேட்டுள்ளனர்.
அப்போது, திமுக ஊராட்சி மன்ற தலைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மீது சேலையூர் காவல் நிலையத்தில் தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
















