வேலூரில் ஓடும் ரயிலில் செல்போனை பறித்துவிட்டு பெண்ணை கீழே தள்ளிவிட்ட நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு சென்னையில் இருந்து வேலூருக்கு ரயிலில் சென்ற இளம்பெண்ணிடம், ஹேமராஜ் என்பவர் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துள்ளார்.
பின்னர் அந்தப் பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த வேலூர் மகிளா நீதிமன்றம் ஹேமராஜூக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
கோவையில் இருந்து திருப்பதி சென்ற ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துக் கீழே தள்ளிவிட்ட வழக்கில் இவருக்கு ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
















