நவம்பர், டிசம்பர் மழைக்காலம் என்பதால் முட்டை உற்பத்தி 15 சதவீதம் குறைந்துள்ளதாக முட்டை வியாபாரிகள் சங்க தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் முட்டை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர்செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தத சங்க தலைவர் ஆனந்தன், முட்டை கொள்முதல் விலை 6 ரூபாய் 10 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விலை அதிகம் என்றும், முட்டைகளை பதுக்குவதாக சிலர் கூறுவதில் சாத்தியமில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், கோழிப்பண்ணையாளர்கள் யாரும் முட்டைகளை பதுக்கவில்லை என்றும், தற்போது மழைக்காலம் என்பதால் முட்டை உற்பத்தி 15 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
















