சென்னை ஆவடி அருகே மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட தாயின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சேக்காடு அன்னை சத்தியா நகர் பகுதியில் RK மனிதநேய காப்பகம் என்ற பெயரில் மன நோயாளிகள் மறு வாழ்வு மையம் இயங்கி வருகிறது.
இங்கு மனநலம் பாதிக்கப்பட்ட 56 பேர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இதில் வேளச்சேரியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாய் மேரியை கடந்த 20 தினங்களுக்கு முன் சேர்த்துள்ளார்.
இந்நிலையில் உடல் நிலை சரி இல்லாமல் மேரி உயிரிழந்து விட்டதாகப் பாஸ்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பாஸ்கர் காப்பகத்திற்கு சென்று விசாரித்துள்ளார். ஆனால் காப்பக நிர்வாகத்தினர் முறையாக பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த பாஸ்கர் தாயின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பாஸ்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
















