லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் தாக்கல் செய்த மனுகுறித்து பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நீதிபதி ஶ்ரீவஸ்தவா, அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் அசோக்குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதன் காரணம் ஏன் என நீதிபதிகள் வினா எழுப்பினர்.
அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் பெற்ற வழக்கில் அசோக் குமாருக்கு தொடர்பு இருப்பதாகவும் வழக்கில் 9 முறை நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகாததால் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
இதைக்கேட்ட நீதிபதிகள், வழக்கில் 3 வாரங்களில் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.
















