சவுதி கால்பந்து லீக் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த BICYCLE KICK கோல் இணையத்தில் வைரலாகி உள்ளது.
40 வயதான போர்ச்சுக்கல் கால் பந்து வீரர் கிறிஸ்டியானோ ரெனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இணைந்து தனது கால்பந்து பயணத்தைத் தொடங்கினார்.
பின்னர் ரியல் மேட்ரிட் போன்ற அணிகளில் விளையாடித் தற்போது அல் நஸர் அணிக்காக விளையாடி வருகிறார்.
தற்போது நடைபெற்று வரும் சவூதி ப்ரோ லீக்கில் அல் கலீஜ் அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ சுழன்று கடினமான பைச்சைக்கிள் கிக்கை சுலபமாகச் செய்து கோல் அடித்தார்.
மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் இதனைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கி ஆர்ப்பரித்தனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மிகவும் கடினமான இந்தக் கிக்கை, 40 வயதில் சுலபமாகச் செய்து கால்பந்தின் ஜாம்பவான் என்பதை ரொனால்டோ நிரூபித்திருக்கிறார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இப்போட்டியில் ரொனால்டோவின் அபார கோலால், அல் நசர் அணி 4-1 என வெற்றி பெற்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
















