வங்காள விரிகுடா கடல்பரப்பில் இரு வேறு ஏவுகணை சோதனைகள் நடத்தப்படவுள்ளதால், குறிப்பிட்ட நாட்களில் அந்தக் கடற்பரப்பின் மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடா கடல் பரப்பில் இரு ஏவுகணை சோதனைகளை நடத்துவதற்கான அறிவிப்பை இந்தியா வெளியிட்டது.
இதனால் வரும் டிசம்பர் 1 முதல் 4-ம் தேதி வரையும், ஐ.என்.எஸ் வர்ஷா நீர்மூழ்கி கப்பல் தளத்தில் இருந்து விசாகப்பட்டினம் கடல் பரப்பில் உள்ள 1695 கிலோ மீட்டர் தூரம் வரை விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதே போல வரும் டிசம்பர் 6 முதல் 8-ம் தேதி வரை, ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் தொடங்கி விசாகப்பட்டினம் கடல் பரப்பில் சுமார் 1480 கிலோ மீட்டர் வரையிலும் விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகள் பரிசோதிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
















