நடிகை ராதிகா தயாரிப்பில்தான் தனது முதல் திரைப்படம் வெளியானது என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இயக்குநர் ஜே.கே.சந்துரு, நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் சென்ராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், ரிவால்வர் ரீட்டா படத்தின் கதை பிடித்ததால் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.
ரீட்டாவாகத் தன்னை தேர்ந்தெடுத்த இயக்குநருக்கு நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ், படத்தில் நடிகர் சென்ராயன் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார்.
மேலும், ரிவால்வர் ரீட்டா படம், குடும்பத்துடன் சேர்த்து ரசிக்கும் படமாக வந்துள்ளதாக நடிகை கீர்த்தி சுரேஷ் கூறினார்.
















