திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி, 2ம் நாளான்று பஞ்ச மூர்த்திகள், வெள்ளி இந்திர விமானத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கடந்த 24ம் தேதி கார்த்திகை தீப விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 2ம் நாளான்று. பஞ்ச மூர்த்திகளான விநாயகர், முருகன், அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர், 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.
பின்னர் பஞ்ச மூர்த்திகள் அனைவரும் வெள்ளி இந்திர விமானத்தில், மாடவீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதில் திரளானா பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனிடையே விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீப விழா டிசம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது.
















