சீனாவின் டியாங்கோங் விண்வெளி நிலையத்தில் சிக்கிக் கொண்ட 3 வீரர்களை பத்திரமாகப் பூமிக்கு அழைத்து வர ஷென்சோ- 22 என்ற விண்கலம் வெற்றிகரமாகப் புறப்பட்டது.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் தனித்தனியே சர்வசேத விண்வெளி நிலையங்களை உருவாக்கியுள்ளன.
டியாங்கோங் என்று அழைக்கப்படும் சீன விண்வெளி நிலையத்தை ஆய்வு செய்வதற்காக ஆறு மாதத்திற்கு ஒருமுறை வீரர்கள் செல்வது வழக்கம். அதன்படி, ஷென்சோ-20 விண்கலம் வாயிலாகக் கடந்த மே 3ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மூன்று வீரர்கள் பயணம் மேற்கொண்டனர்.
ஆனால், அவர்கள் திரும்ப வேண்டிய விண்கலம் சேதமடைந்ததால், பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
கடந்த 1ஆம் தேதி ஷென்சோ- 21 என்ற விண்கலம் மாற்று ஏற்பாடாக அனுப்பி வைக்கப்பட்டு 3 வீரர்களை விண்வெளி நிலையத்தில் இறக்கி விட்டு, ஏற்கனவே இருந்த 3 வீரர்களை பத்திரமாகப் பூமிக்கு அழைத்து வந்தது.
இதனால், டியாங்கோங் விண்வெளி நிலையத்தில் தற்போது இருக்கும் வீரர்கள் பூமி திரும்புவதற்கு விண்கலம் இல்லாத நிலை ஏற்பட்டது.
இதற்கு மாற்று ஏற்பாடாக ஒரே மாதத்தில் ஷென்சோ-22 என்ற விண்கலத்தை உருவாக்கிய சீனா, ஜியுகுவான் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்- 2எப் ராக்கெட் மூலம் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.
















