பீகாரில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்குறித்து அம்மாநில தலைமைச் செயலாளர் பிரத்ய் அம்ரித், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மாநிலத்தில் பரவலான வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில் வளர்ச்சிகுறித்து முக்கிய முடிவெடுக்கப்பட்டதாகக் கூறினார்.
கிழக்கிந்தியாவின் தொழில்நுட்ப மையமாகப் பீகாரை மாற்றும் நோக்கில் பாதுகாப்பு வழித்தடம், செமிகண்டக்டர் உற்பத்தி பூங்கா, உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
















