இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு நடப்பாண்டு 4 டிரில்லியன் டாலரை தாண்டும் எனத் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இந்திய தனியார் முதலீடு சங்கத்தின் பசுமை கொள்கை சார்ந்த மாநாடு நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய அவர், கடந்த மார்ச் மாத இறுதியில் 3 புள்ளி 9 டிரில்லியன் டாலராக இருந்த பொருளாதாரம், தற்போது 4 டிரில்லியன் டாலரை கடக்கும் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 2070ம் ஆண்டுக்குள் கரியமில வாயு உமிழ்வே இல்லை என்ற இலக்கை எட்ட நமது நாடு உறுதி பூண்டுள்ளதாகக் கூறினார்.
















