சென்னை பல்லாவரம் அருகே பங்குச் சந்தை முதலீடு குறித்து ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய இளைஞர் மீது திருமண மண்டபத்தில் புகுந்து பணத்தை இழந்தோர் தாக்குதல் நடத்தினர்.
பல்லாவரத்தை சேர்ந்த கிளிண்டன் என்பவர் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் ஈட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பலரிடமும், பல கோடி ரூபாய் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கிளிண்டனுக்கு பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.
அப்போது அங்குக் குவிந்த பணத்தை இழந்தோர், கிளிண்டன் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















