ராமேஸ்வரத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் ராமநாதசுவாமி கோயிலில் மழைநீர் சூழ்ந்து பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள சாலைகளில் மழைநீர் குளம்போலத் தேங்கியது.
ராமநாதசுவாமி கோயிலின் உட்பிரகாரம் மற்றும் வாயில் முன்பு மழைநீர் குளம்போல மழைநீர் தேங்கியதாகப் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். கோயிலில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தக் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















