ஓசூரில் ஏல சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
ஓசூர் பார்வதி நகர் பகுதியைச் சேர்ந்த ஃபாரூக் என்பவர், மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் 100க்கும் மேற்பட்டோர் பணம் கட்டியுள்ளனர்.
ஒருகட்டத்தில் அவர் திடீரென மாயமாகவே, பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில், ஃபாரூக் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
















