மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மீண்டும் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என மயிலாடுதுறை – தரங்கம்பாடி ரயில் மீட்புக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை – தரங்கம்பாடி ரயில் சேவை தொடங்கப்பட்டதன் நூறாவது ஆண்டு தின விழா, மயிலாடுதுறை ரயில் நிலைய வாயிலில் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மயிலாடுதுறை – தரங்கம்பாடி ரயில் மீட்பு குழு சங்கத்தினர் கலந்து கொண்டு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசு வழக்கறிஞர் ரயில் ராஜேந்திரன், பொதுமக்கள் நடத்திய பலகட்ட போராட்டங்களின் விளைவாக 2010ஆம் ஆண்டு 175 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும், பின்னர் அது கிடப்பில் போடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
2026-2027 மத்திய பட்ஜெட்டில் மீண்டும் ரயில் இயக்குவதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
















