காஞ்சிபுரம் மாவட்டம், குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமையொட்டி வெள்ளித்தேர் உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை மாத 2வது செவ்வாய்க்கிழமையையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் வள்ளி – தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் எழுந்தருளிப் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
பின்னர், மேள தாளங்கள் முழங்கப் பக்தர்கள் அரோகரா, அரோகரா எனக் கோஷம் எழுப்பியவாறு வெள்ளி தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















