சொத்துக்களின் வில்லங்க சான்றிதழ், நகல் பத்திரங்களை வெளியாட்கள் பெற்றால், அதுகுறித்த விவரங்களை அசல் உரிமையாளருக்குத் தெரிவிப்பதற்கான புதிய வசதியை ஏற்படுத்தப் பத்திரப் பதிவுத்துறை முடிவு செய்துள்ளது.
சொத்தின் அடிப்படை விபரங்களை, யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற சூழலை, மோசடி நபர்கள் தவறாகப் பயன்படுத்துவதாகத் தொடர் புகார் எழுந்துள்ளது.
இதனை தடுக்கும் விதமாக வில்லங்க சான்றிதழ், நகல் பத்திரங்களை வெளியாட்கள் பெற்றால், அதுகுறித்த தகவல்களை அசல் உரிமையாளர்களின் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி வாயிலாகத் தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாகப் பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பத்திரப்பதிவுக்கான கணினி மென்பொருளில் இதற்கான வசதியை ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
















