டெண்டர் பணிகள் தொடக்கம் : உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தகவல்!
Aug 27, 2026, 08:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டெண்டர் பணிகள் தொடக்கம் : உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தகவல்!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 01:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தண்டையார்பேட்டை, அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவது தொடர்பான டெண்டர் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள ராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உழைப்போர் உரிமை இயக்கம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தூய்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், தனியாருக்கு வழங்குவது என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களின் தூய்மை பணிகள் ஏற்கனவே தனியாருக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும், ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டலங்களில் 875 பேருக்கு நியமன உத்தரவுகள் வழங்கியபோதும் 425 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தண்டையார்பேட்டை மற்றும் அண்ணா நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகள் விரைவில் தனியாருக்கு வழங்கப்படும் என்றும், தனியாருக்கு வழங்குவதற்கான டெண்டர் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, மாநகராட்சியின் பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்கக் கால அவகாசம் வேண்டும் உழைப்போர் உரிமை இயக்கம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Tags: சென்னை மாநகராட்சிTender work begins: Chennai Corporation informs the High Court
Share
Tweet
SendShare
Previous Post

100 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை உடனடியாக மீட்க வேண்டும் : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

வெளியாட்கள் வில்லங்க சான்றிதழ் பெறுவதை இனி எளிதாக அறியலாம் : பதிவுத்துறை

Related News

நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு – மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்!

நேபாள வெள்ளத்தில் ஆன்மிக பயணம் மேற்கொண்ட தமிழர்களின் 2 வேன்கள் அடித்துச் செல்லப்பட்டதா?

மேட்டூர் அணை வரும் 28ம் தேதி திறப்பு? – காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை – அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு – காரணம் என்ன?

சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் – மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை : இந்தியாவின் வர்த்தகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? – சிறப்பு தொகுப்பு!

நேபாள பிரதமருடன் தொலைபேசியில் பேச்சு – அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதி!

நேபாளம் கோசி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் – ஏராளமானோர் மாயம்!

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாற வேண்டும் – அண்ணாமலை

ஓணம் பண்டிகை – குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!

ஓணம் பண்டிகை – திருச்சி ஐயப்பன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies